கண்டி மாநகர சபையின் கைத்தொழில் திணைக்களத்திற்கு சொந்தமான டிரக்டர் ரக வாகனமொன்று கண்டி மூல்கம்பொல விகாரை மாவத்தையில் உள்ள ஒரு உப வீதியில் சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாநகர சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மேலும் 2 ஊழியர்கள் பலத்த காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் ஹந்தானை – உடுவெல பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 48 வயதுடையவர் எனவும், அவர் கண்டி மாநகர சபை ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.
மூல்கம்பொல பகுதியில் உள்ள வடிகான் ஒன்றை புனரமைப்பதற்காக பொருட்களை ஏற்றிச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் மேலும் அறியப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி மாநகர சபை மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
