Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘ஹரக் கட்டா’ வழக்கு: தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) காவலில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என்ற கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இவ்வழக்கு இன்று நீதிபதி புத்திக சி. ரகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்போது சந்தேகநபர்களின் பிணை மனுவும் பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்கான தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், PTA குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தங்காலை பழைய சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசுடமையாக்க அவதானம்!

ஆடி 31, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹொரண–பிலியந்தல குடிநீர் திட்டம் ஆரம்பம்!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சார ரயில் பாதை கட்டமைப்பு பணிகள் அடுத்தவருடம் ஆரம்பமாகும்

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தேகநபர் வழங்கிய தகவலில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube