இலங்கையின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட உயிர்காப்பு நடவடிக்கைகளின்போது, நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 8 பேரை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினர் (SLCG) காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்டவர்களில் 6 உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 29 மற்றும் 35 வயதுடைய ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.
இலங்கை கடலோர பாதுகாப்புப் படை 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து, கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் உயிர்காப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில், நீரில் மூழ்கவிருந்த 1,237 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 2,654 பேரின் உயிர்களை கடலோர பாதுகாப்புப் படையின் உயிர்காப்பாளர்கள் காப்பாற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
