1991 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2026 ஆம் ஆண்டில் Wesley College Under-12 கால்பந்து அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
கொழும்பு சாஹிரா கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கிடையிலான 12 வயதுக்குட்பட்ட கால்பந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (06) காலை சென் பீட்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் சிறப்பான வெற்றியை வெஸ்லி கல்லூரியின் 12 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்கள் பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.
