பதுளை போதனா வைத்தியசாலைக்கு அருகில் இன்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் ஒன்று, இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் பதுளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
