Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் மீன்களை உலரவைக்கும் கூடங்களை அமைப்பதற்கான திட்டம்!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நன்னீர் மற்றும் கடல்நீர் மீன்பிடித் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி, நுகர்வோருக்கு ஆரோக்கியமான தயாரிப்புகளை வழங்கும் நோக்கில், விஞ்ஞான ரீதியான மீன் உலர்த்தும் கூடங்களை அமைப்பதற்கான முன்னோடித் திட்டம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் அண்மையில் வத்தளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் விடதா (VIDATHA) பிரிவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, வத்தளை மற்றும் நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுகளை மையமாகக் கொண்டு 3 மீனவர் சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனம் (ITI), நாரா (NARA) நிறுவனம், ஜனதக்ஷன் மற்றும் நோர்ட் (NERD) நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு வள பங்களிப்பை வழங்கவுள்ளன. இதற்கு மேலதிகமாக, மீன்பிடி வளங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு பெறுமதி சேர்ப்பதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமும் இதற்கு இணையாக நடத்தப்படவுள்ளது
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குப்பைகளால் நிரம்பி வழியும் கண்டி நகரம்!

வைகாசி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்க மாட்டோம் என உறுதி!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீர!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

ஆவணி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube