Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் கைது!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்கிய விவகாரம் தொடர்பில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் (CFIB) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போலி கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பான வழக்கு ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளை அடுத்து, இன்று (06) திங்கட்கிழமை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் (பாதாள உலக) குழுவொன்றின் உறுப்பினரின் புகைப்படம் இந்த கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அதற்கான கைவிரல் அடையாளங்கள் (Biometric Data) வேறொரு நபருடையது என விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குடிவரவு திணைக்கள அதிகாரி, உரிய சரிபார்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், சட்டவிரோதமான முறையில் இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, போலி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மதிலேறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்!

ஆனி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பூனாகல, கபரகல தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்!

ஆடி 25, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்வானிலை

2026ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் இன்று

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube