Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

Happy Raj திரைப்படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் திகதி ‘ஹேப்பி ராஜ்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளிவந்த ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தனது அனுமதியின்றி தனது பாடலை உருமாற்றி பயன்படுத்தியுள்ளனர். எனவே அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் இருந்த அந்தப் பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம் குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.சரவணன், இளையராஜா அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் ‘ஹேப்பிராஜ்’ படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாடலை உருமாற்றி இருப்பதால் பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற பாடலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். ஹேப்பி ராஜ் வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையில் இளையராஜா பாடலுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அமீர்கானுக்கு 3வது திருமணமா?

ஆனி 5, 2026
சினிமா

OTT வெளியீடுகள்: ஒரு பார்வை

ஆனி 16, 2026
சினிமா

“29” படத்தின் பொல்லாத ஆசை பாடல் வெளியானது!

சித்திரை 27, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தடைகளைத் தாண்டி வெளியாகிறது ஜன நாயகன்…!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube