Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

புதிய கண்டுபிடிப்பால் உலகை வியக்க வைத்த இலங்கை இளைஞர்கள் – அவுஸ்திரேலியாவில் கிடைத்த உயரிய கௌரவம்!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர்களின் திறமையையும் புத்தாக்கச் சிந்தனையையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் Thadus CodeLabs நிறுவனத்தின் இணை நிறுவனர் நெத் தர்மசிறி மற்றும் அவரது குழுவினர், 2026 குயின்ஸ்லாந்து 7NEWS இளம் சாதனையாளர் விருதுகளில் இரண்டு முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

இலங்கை சமூகம் உள்ளிட்ட மக்களின் பெரும் ஆதரவுடன், 482 வாக்குகளைப் பெற்று குயின்ஸ்லாந்து மாநிலத்தின் டாப் 5 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக Thadus CodeLabs தெரிவாகியுள்ளது.

இந்த விருதிற்கான பிரிவிலும் இவர்கள் டாப் 5 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தகுதி பெற்றுள்ளனர்.
12-ஆம் வகுப்பு மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்த Thadus CodeLabs, இணைய வசதி இல்லாத கிராமப்புறக் குழந்தைகளின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் உருவாக்கியுள்ள Offline Coding Platform மூலம் இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கணினி நிரலாக்கத்தை கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்

இந்தச் சேவையை வரும் காலங்களில் தெற்காசியாவின் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வெற்றியின் பின்னர் கருத்து தெரிவித்த நெத் தர்மசிறி, “இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இலங்கை சமூகத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள்,” என்று தெரிவித்தார். மேலும், “இலங்கையின் கிராமப்புற இளைஞர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். டிஜிட்டல் இலங்கையின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதில் எனது பங்களிப்பை வழங்குவேன்,” என்று அவர் உறுதியளித்தார்.

தற்போது ‘Thadus Group’, தெற்காசியா மற்றும் இலங்கையில் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி, கணினி அறிவியல் மற்றும் டிஜிட்டல் கல்வியைத் தரம் உயர்த்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் தென்படாத பகுதி நேர சந்திர கிரகணம்

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்லோச் தமிழ் வித்தியாலயத்தில் புதிய நுழைவாயில் திறப்பு விழா

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 – 80,000 வரை உயர்வு – சமல் சஞ்சீவ

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube