Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் பிணையில் எந்த முறைகேடுகளும் இடம்பெறவில்லை – சாகர காரியவசம்!

வைகாசி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள். காட்டுச்சட்டமே தற்போது அமுலில் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது தற்கொலை செய்துக் கொள்வதற்கு ஒரு தரப்பினரால் தூண்டப்பட்டாரா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது. கபில சந்திரசேனவுக்கு வழங்கப்பட்ட பிணை குறித்து எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தொடர்பில் கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முன்னர், நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி ஊடாக பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவின் பெயரை குறிப்பெடுத்ததாக கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதேபோல் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இல்லை.இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் அரசியல் உத்தரவுகளுக்காக நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுகிறார்கள்.

சாட்சியாளர்கள் படுகொலை செய்யப்படுவது, மர்மமான முறையில் உயிரிழப்பது தற்போது வழக்கமாகி விட்டது. இது காட்டுத்தன்மையான சட்டத்தின் நிர்வாகமாகும்.இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பட்டுப்புடவை!

ஆனி 6, 2026
இலங்கை

இலங்கைக்கே உரித்தான எலி இனம் கண்டுபிடிப்பு!

ஆனி 1, 2026
இலங்கைவிளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் தெரிவு அணிக்கு எதிராக இலங்கை ஆதிக்கம்!

ஆனி 20, 2026
இலங்கை

தனமல்வில மற்றும் ஹம்பெகமுவவில் பாரிய கஞ்சா தோட்டங்கள் முற்றுகை!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube