அனுமதிப்பத்திரமின்றி 2 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள இரண்டு வலம்புரி சங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 55 வயதுடைய நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் இன்று கிண்ணியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரின் வீட்டிலிருந்து வலம்புரி சங்குகள் மீட்கப்பட்டன. பின்னர் அவர் மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
