பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) அட்டை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் நேற்று (07) உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
2026ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறையின் கீழ், இலங்கையில் வாழும் 5 மற்றும் 6ஆம் தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் OCI அட்டைக்கான தகுதி விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அதன் கீழ் வழங்கப்பட்ட முதல் OCI அட்டை இதுவாகும். இதன்போது இந்தியாவின் புதிய e-OCI சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
