ஊழல் குற்றச்சாட்டில் இன்று (8) காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தேர்தல் காலங்களில் அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாகவே இவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் இன்று (8) இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார்.
