பொது போக்குவரத்தை நவீனமயப்படுத்தும் அரசின் முன்னெடுப்பின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 104 நவீன மெட்ரோ பேருந்துகளை ஏற்றிய கப்பல் இன்று (29) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிக வசதிகளுடன் கூடிய இந்த பேருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இப்பேருந்துகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் கொழும்பு நகரப் பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
