Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதி உதவி!

#சரசவிதிரியோஅபிமன் #மாற்றுத்திறனாளிமாணவர்கள் #கல்விஉதவி #ஜனாதிபதிநிதியம் #பல்கலைக்கழகம் #உயர்கல்வி #SriLanka #Education #UniversityStudents #Scholarship

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உடல்ரீதியான குறைகளைத் தங்களது கல்விக் கனவுகளுக்கு தடையாக ஆக்கிக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சரசவி திரியோ அபிமன்” என்ற விசேட மாணவர் கல்வி உதவி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 11 சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் பாராட்டப்படவுள்ளதுடன், ஒரு மாணவருக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“சரசவி திரியோ அபிமன்” ஆரம்ப நிகழ்வில் 254 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டப்படவுள்ளதுடன், இத்திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ள ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 400 ஆகும். கொழும்புக்கு வருவதில் எதிர்நோக்க வேண்டியுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான இத்திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சரசவி திரியோ அபிமன்” வேலைத்திட்டமானது, மாற்றுத்திறனாளி மாணவர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கல்வி சாதனைகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குவதுடன், எந்தவொரு உடல்ரீதியான குறைகளும் கல்விக்கனவுகளுக்கு தடையாக அமையக்கக்கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு விசேட சமூக வலுவூட்டல் திட்டமாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாவ, மகரகம உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பஸ்கட்டண அதிகரிப்பிற்கான ஒன்றுகூடல் இன்று!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்

ஆடி 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகினார் விராட் கோலி!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube