போதை மாத்திரைகள், கொக்கைன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றத் தடுப்பு பிரிவு சுற்றிவளைப்பை நடத்தியுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 69 கிராம் குஷ், 18 கிராம் கொக்கைன் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 19 வயதான சந்தேக நபர் கொழும்பு கிரேன்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மாளிகாவத்தை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
