Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேராதனையிலிருந்து கடுகண்ணாவைக்கு மீள ஆரம்பமான ரயில்சேவை

ஆடி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

‘டிட்வா’ சூறாவளியினால் மலையக ரயில் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்திருந்த நிலையில், இன்று சனிக்கிழமை (11) முதன்முறையாக பேராதனை சந்தி ரயில் நிலையத்திலிருந்து கடுகண்ணாவைக்கு ரயில் ஒன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கண்டி ரயில் நிலையத்திலிருந்து விசேட சாலை மார்க்கமாக பேராதனை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரயில் எஞ்சின் மற்றும் இரு பிரேக் வான்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ரயில், கடுகண்ணாவை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

சூறாவளியினால் கடுமையாகச் சேதமடைந்துள்ள ரயில் பாதைகளை விரைவாகப் புனரமைப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் ரயில்வே பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காகவே இந்த ரயில் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான காலநிலை மற்றும் நிலச்சரிவுகளால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில்வே உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புப் பணிகளில், இந்த ரயில் இயக்கம் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு!

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மாணவிகள்!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஆடி 11, 2026
இலங்கை

சீன பாதுகாப்பு அதிகாரி–இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube