Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆடி 13, 2026
படிக்க 2 நிமிடங்கள்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (13) காணொளி ஊடாக உத்தரவிட்டு இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்.

2008 ம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, டீ.எம்.வி.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த ஜூன் 17 ம் திகதி குற்றபுலனாய்வுப் பிரிவினர் வழக்கு தாக்கல் செய்ததையத்து அவர்களை ஜூன் 30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் பிள்ளையான் உட்பட்ட 3 பேரையும் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து 3 பேரும் தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்ற நிலையில், இன்று திங்கட்கிழமை (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவல் வழங்குனரான முகமட் சிபான், பிள்ளையான் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாதது தொடர்பாக நீதிமன்றிற்கு தெரிவித்தனர்

இதனை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான் ஏனைய சந்தேகநபர் ஆகிய இருவரையும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்டு பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.

இதேவேளை கடந்த 30ஆம் திகதி பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் உட்பட 3 பேரையும் புலனாய்வுப் பிரிவினர் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாதங்களில் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளது மதுவரித் திணைக்களம்

ஆடி 31, 2026
இலங்கை

டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் தீவிர சிகிச்சையில்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பிலான அவதூறு பதிவுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஆடி 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

10 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

ஆவணி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube