பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அமைந்துள்ள பொன்டைன்ப்ளேவ் (Fontainebleau) வனப்பகுதியில் பரவியுள்ள பாரிய காட்டுத்தீயால் சுமார் 800 ஹெக்டேயர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் இந்தக் காட்டில் தீ வேகமாகப் பரவி வருவதால், பரிஸிலிருந்து வெளியே செல்லும் A6 நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்தால் மின்கேபிள்கள் சேதமடைந்ததன் காரணமாக, பரிஸ் மற்றும் Lyon நகரங்களை இணைக்கும் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேவையான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தொடருந்து போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பரிஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக தீயணைப்பு விமானங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனுடன், தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கனடாவும் இரண்டு தீயணைப்பு வானூர்திகளை அனுப்பவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
