உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கும் அளவை விட சிகரெட் வரி குறைவாக நிர்ணயிக்கப்பட்டதால், 2025ஆம் ஆண்டு முதல் இலங்கை ரூ.25 பில்லியனுக்கும் அதிகமான வரி வருவாயை இழந்துள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, நாளொன்றுக்கு சுமார் ரூ.47.3 மில்லியனும், ஆண்டுக்கு ரூ.17.3 பில்லியனும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ரூ.8 பில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகரெட் சில்லறை விலையின் குறைந்தது 75% வரியாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள நிலையில், இலங்கையில் அது தற்போது 67% ஆகக் குறைந்துள்ளது. அனைத்து வகை சிகரெட்டுகளுக்கும் கலால் வரியை உயர்த்தினால் இந்த வருவாய் இழப்பை குறைக்க முடியும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
