Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றாடல் அமைச்சில் காணப்படும் நிறுவன வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்த ஊடக சந்திப்பு நேற்று (15)  அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி, பிரதி அமைச்சர் அந்தன் ஜயகோடி, அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவவல மற்றும் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மராசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆட்சேர்ப்பு செயல்முறை, நிதி ஒதுக்கீடு, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்பட்ட சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரிகளுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியன தெளிவு படுத்தப்பட்டன.
 அமைச்சின் கீழ் 10 நிறுவனங்கள் செயல்படுகின்றன (மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, வன பாதுகாப்புத் துறை, அரச மரக் கூட்டுத்தாபனம், தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம், தேசிய பூங்காக்கள் திணைக்களம், நீர் வளச் சபை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை காலநிலை நிதியம் – (சுற்றாடல் அமைச்சுடன் இணைக்கப்பட்டு, அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்).
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ள ‘நிலையான உயிர்க்கோளம் – பசுமையான வாழ்க்கை’ என்ற சுற்றாடல் திட்டம்,  பாதுகாப்பு மற்றும் அதைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்கான வாக்குறுதிகளை உள்ளடக்கியதுடன், பணியாளர் வெற்றிடங்களை நிரப்புவதிலும், உயர் தரம் மற்றும் நிருவாகத்துடன் வெற்றிடங்களை நிரப்புவதிலும், அவர்களைத் தரமான முறையில் அரச சேவையில் ஈடுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
தற்போதைய பொருளாதாரச் சூழலில், அமைச்சரவையின் விசேட அனுமதிக்கு உட்பட்டு பணியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதுடன், அப்பணியாளர்கள் தற்போது அரச சேவையின் சரியான நடைமுறையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி பதிவு செய்த பெண் விளக்கமறியலில்!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது: அரசாங்கம் விளக்கம்

ஆனி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவில் 46 மில்லியன் டொலர் லாட்டரி பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றப் பங்களிப்பில் குவைத் முதலிடத்தில் உள்ளது!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube