Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேயிலை தோட்டங்களில் மாணிக்க கல் அகழ்வு – தொழிலாளர்கள் பாதிப்பு

ஆடி 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்

நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரை மூடப்படவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குழிகள் தோண்டப்பட்டு, அவை மூடப்படாததால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு மிக அருகில் உள்ள தேயிலை தோட்டத்திலும், கெசல்கமு ஓயா பகுதியிலும் நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டப் பிரிவிலும், மாணிக்கக் கல் அகழ்வுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரை மூடப்படவில்லை.

மேலும், அகழ்வில் ஈடுபட்டவர்கள் தேயிலை மரங்களை வேரோடு பிடுங்கி, சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்தெடுத்து வருவதாகவும், இதனால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகமும் கூறுகின்றன.

நேற்று (15) இரவு நோர்வூட் தோட்டத்துக்குச் சொந்தமான என்.சி தேயிலைப் பிரிவில், சிலர் தேயிலைச் செடிகளுக்கு அடியில் உள்ள மாணிக்கக் கல் அடங்கிய மண்ணைத் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் தோண்டப்பட்ட குழிகளால், தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

என்.சி தேயிலைத் தோட்டத்தில் பல குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நோர்வூட் பொலிஸாரிடம் புகார் அளித்த போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் காணப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

நோர்வுட் என்.சி தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் பாயும் கெசல்கமு ஓயா அருகில் தொடர்ந்து இரவில் 200க்கும் மேற்பட்டோர் மாணிக்கக் கல் அகழ்ந்தெடுத்து வருவதால் அப்பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனினும், அகழ்வுப் பணிகளின் பின்னர் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத அகழ்வுகள் மற்றும் மூடப்படாத குழிகள் பாரிய சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன.

நிலத்தடி நீர் குறைதல், மண்ணரிப்பு மற்றும் தேயிலை தோட்டத்தில் நடுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற குழிகளால் தொழிலாளர்கள், எதிர்பாராதவிதமாக ஏனையவர்கள் அல்லது விலங்குகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி பதிவாகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சட்டவிரோதமாக அல்லது முறையாக மூடப்படாமல் திறந்த நிலையில் விடப்படும் குழிகளில் தேங்கும் மழைநீர், நுளம்புகள் பெருக வழிவகுத்து டெங்கு போன்ற நோய்களையும் உருவாக்குகிறது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – அரசு அறிவிப்பு!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி ஆக்கிரமிப்புகளை தடுக்க ஜனாதிபதி விசேட உத்தரவு!

வைகாசி 23, 2026
இலங்கை

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான தெளிவான சுற்றுநிருபங்களை அரசு வெளியிட வேண்டும் – சாணக்கியன்

ஆவணி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

50 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு!

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube