Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் -சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொலைக் குற்றம் மற்றும் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்கு!

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட 31 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அடையாளம் காணப்படும் அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராகக் கொலைக் குற்றச்சாட்டு, புத்தாக்கப்பட்ட துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

ஒரே சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை நீதிமன்றத்திலும், சாதாரண நீதிமன்றத்திலும் என இருவேறு வழக்கு விசாரணைகளை நடத்தி தண்டனை வழங்குவது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டிய CID அதிகாரிகள், தற்போது இந்த விவகாரம் தொடர்பாகத் தங்களால் விரிவான விசாரணைகள் நடத்தப்படுவதால் சிறைச்சாலை நீதிமன்ற விசாரணை அவசியமற்றது எனக் குறிப்பிட்டனர். எனினும், சிறைச்சாலைகள் சட்டத்தின்படி அதற்கான அதிகாரம் சிறைச்சாலைக்கு உள்ளதால், இது குறித்து ஆராய்ந்து பின்னர் உத்தரவு பிறப்பிப்பதாக நீர்கொழும்பு பிரதம நீதவான் ஷலனி பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக ட்ரோன் (Drone) பரிசோதனை ஒன்றை நடத்துவதற்கும், CID கோரிய ஏனைய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த நீதவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலரும் சாட்சியமளித்திருந்தன

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுவசெரியவுக்கு 10 ஆண்டுகள் நிறைவு!

ஆடி 28, 2026
இலங்கைஉலகம்

கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெற்ற மோதலில் சீன பிரஜை உயிரிழப்பு!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் நாளை பாரிய போராட்டம்!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube