Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களை மறிக்கும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

#பேருந்துதரிப்பிடம் #சட்டநடவடிக்கை #பொலிஸ் #போக்குவரத்து #பேருந்து #பயணிகள்பாதுகாப்பு #SriLankaPolice #BusStops #TrafficRules #PublicTransport

ஆவணி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தி, பொதுப் பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு இடையூறு ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்து தரிப்பிடங்கள் தடையின்றி இருப்பது அவசியம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பேருந்து தரிப்பிடத்துக்கு முன்புறம் 30 மீற்றர் மற்றும் பின்புறம் 15 மீற்றர் வரையிலான பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கென தனியான நிறுத்துமிடங்கள் உள்ள இடங்களில், முன்புறம் 15 மீற்றர் மற்றும் பின்புறம் 10 மீற்றர் பகுதியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து தரிப்பிடங்களைத் தடையின்றி வைத்திருப்பதுடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மேலும் ஆபத்தானது: இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா மனித உரிமைகள் அலுவலகம் எச்சரிக்கை!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 வயது சிறுவன் தனியாக கொழும்புக்கு செல்லமுயன்ற சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சா கலந்த மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

ஆவணி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் பயணிகள் கப்பலில் திடீர் தீ விபத்து – 5 பேர் பலி

புரட்டாதி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube