செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய தினம் (17) அகழ்வின் போது 11 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 7 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.

இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 423 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
