1958-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் கால்பந்து ஜாம்பவான் பெலெ அணிந்திருந்த ஜெர்ஸி, நியூயார்க்கில் உள்ள சோத்பி (Sotheby’s) ஏல நிறுவனத்தில் 4.9 மில்லியன் டொலர் ஏலத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.
பெலேயின் நினைவுப் பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதில், இந்தச் ஜெர்ஸி இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருளாகும்.
கால்பந்து வரலாற்றில், 1986 உலகக் கோப்பையில் டியாகோ மரடோனா அணிந்திருந்த ஜெர்ஸி (7.1 மில்லியன் பவுண்டுகள்) முதலிடத்தில் உள்ள நிலையில், ஏலம் போன கால்பந்து ஜெர்ஸிகளில் இது இரண்டாவது அதிக மதிப்புள்ள ஜெர்ஸியாகும்.
இதே ஏலத்தில், மரடோனா 1986 உலகக் கிண்ணத்தில் அணிந்திருந்த கேப்டன் கைப்பட்டை 512,000 டொலருக்கும், மெஸ்ஸி 2017-ல் பார்சிலோனா அணிக்காக விளையாடியபோது அணிந்திருந்த ஜெர்ஸி 217,600 டொலருக்கும், மற்றும் டேவிட் பெக்காம் 2002 உலகக் கிண்ணத்தில் அணிந்திருந்த ஜெர்ஸி 51,200 டொலருக்கும் ஏலம் எடுக்கப்பட்டன.
