Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பானிடமிருந்து 3 புதிய அம்பியூலன்ஸ்கள்!

#JapanSriLankaFriendship #AmbulanceDonation #SriLankaHealth #NorthWesternProvince #Healthcare #Japan #SriLanka #Marawila #Nikaweratiya #Dambadeniya #Thinakaran #SriLanka #LKA #SL

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
ரூ.2 கோடிக்கும் அதிக பெறுமதியில் அம்பியூலன்ஸ்கள் – மாரவில, நிக்கவரெட்டிய மற்றும் தம்பதெனிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
ஜப்பான் – இலங்கை சர்வதேச நட்புறவு ஒத்துழைப்பு அமைப்பினால் வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு ரூ. 2 கோடிக்கும் அதிக பெறுமதியான 3 அம்பியூலன்ஸ்கள் நேற்று (31) காலை வழங்கப்பட்டன.
இந்த அம்புலன்ஸ்களை வழங்கும் நிகழ்வு வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள வளாகத்தில், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
வடமேல் மாகாணத்தில் சுமார் 150 சுகாதார நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது அவசர நோயாளர் சேவைகளுக்காக 95 அம்பியூலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் சேவைகளுக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில் இந்த 3 அம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட அம்பியூலன்ஸ்கள் மாரவில, நிக்கவரெட்டிய மற்றும் தம்பதெனிய வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
நிகழ்வின் நிறைவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் குணவர்தன, சுகாதாரத் துறை அதிகாரிகள், வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், ஜப்பான் – இலங்கை சர்வதேச நட்புறவு அமைப்பின் பிரதிநிதிகள் கைட்சோ மிட்டாஷா, யமகிவா மற்றும் அமைப்பின் தலைவர் சம்பத் ஜயசேகர உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

ஆனி 29, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மீனவர் ஒருவர் தமிழகத்தில் கைது!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் சிக்கியது!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிப்போக்களில் குவிந்த பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube