FIFA 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு செம்பியன் ஆர்ஜென்டினாவும், ஐரோப்பிய செம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த தொடரில் ஆர்ஜென்டினா அதிக கோல்களை (19) அடித்து வலுவான தாக்குதலை வெளிப்படுத்தியுள்ளது.
மறுபுறம், ஸ்பெயின் அணி தொடர் முழுவதும் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்து, மிகச்சிறந்த தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க செம்பியன்கள் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது 60 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை.
ஆர்ஜென்டினா ஏற்கனவே 1978, 1986 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் கிண்ணத்தை வென்றுள்ளது.
இந்தநிலையில் இந்த ஆண்டும் கிண்ணத்தை வென்றால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணி என்ற பெருமையைத் தனதாக்கிக்கொள்ளும்.
ஸ்பெயின் அணி ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றுள்ள நிலையில், தனது இரண்டாவது உலகக் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
