மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களில் பொது மக்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிக்கப்படுவதாகவும், இதில் பாரிய ஊழல் முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (EPDP) பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இதனைத் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகனத் தரிப்பிடத்தில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தலைக்கவசத்தைப் (Helmet) பாதுகாப்பதற்கு மேலதிகமாக 50 ரூபாய் சட்டவிரோதமாக அறவிடப்படுகிறது.
வாகனக் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும் குத்தகைதாரரே தலைக்கவசத்தையும் பாதுகாக்க வேண்டியது அவர்களுடைய கடமையாகும்.
இதேவேளை மட்டக்களப்பு பொது நூலக வளாகத்திற்குள் தற்காலிகக் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு வரும் பொது மக்களின் தலைக்கவசங்கள், குடைகள் மற்றும் கையடக்க தொலைபேசி
வைப்பதற்குப் பணம் வசூலிக்கப்படுகிறது. இது மாநகர சபையின் அனுமதியின்றிச் செய்யப்படும் ஒரு கப்பாம் (சட்டவிரோத வசூல்) நடவடிக்கையாகும்.
இவ்வாறான சட்டவிரோத வசூலிப்புகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 20,000 முதல் 25,000 ரூபாய் வரை மக்களிடமிருந்து சுரண்டப்படுவதாகவும், இந்த நிதி மாநகர சபைக்குச் செல்லாமல் தனிப்பட்ட அதிகாரிகளின் கைகளுக்குச் செல்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்களிடமும் இவ்வாறான மறைமுகக் கப்பம் வசூலிப்பதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் இது குறித்து உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதக் கட்டடங்கள் உடனடியாக அகற்றப்படத் தவறும் பட்சத்தில், இது தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
