ஹிரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்ஹஹதொடுபல பகுதியில் பெருமளவிலான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மனிதப் படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நேற்று (18) மாலை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அங்கிருந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ 716 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், மின்னணு தராசு ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
