Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: இரசாயன அறிக்கைக்குப் பின்னரே இறுதி முடிவு – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்!

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான இறுதி முடிவு, அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னரே எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மனைவி, மகன், மெய்பாதுகாவலர் உள்ளிட்ட நெருங்கியவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக திறந்த நீதிவான் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட அனைத்து சான்றுப்பொருட்களும் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, மரணத்தின் உண்மையான காரணம் தொடர்பான உறுதியான முடிவு, அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னரே அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

32 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிமடை- டயரபா பகுதி தொழிலாளர் ஒருவர் தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டார்!

வைகாசி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காஸாவில் 87 சதவீத மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட 5 இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube