Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு!

ஆடி 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் (19) கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (19) ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 37ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 09 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் சிசுக்களின் என்பு கூடு உட்பட 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் (18) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினம் (19) முன்னெடுக்கப்பட்ட போது, குறித்த என்பு கூடு, கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது.

இன்றைய தினமும் குறித்த என்பு கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது நாளைய தினம் (20) திங்கட்கிழமை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

செம்மணியில் புதைகுழிக்குள் இருந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04ஆம் திகதியும் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், புதைகுழிக்குள் இருந்து கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் மீட்கப்படும் இரண்டாவது என்புக்கூடு இதுவாகும்.

அதேவேளை, சனிக்கிழமை ஒரு பெரியவரின் என்பு கூட்டுடன், சிறியவரின் என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் , அத்தனையும் சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவையும் நாளைய தினம் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 91 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 446 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 434என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தனிமையில் தவிக்கும் இந்தியா! 

ஆனி 12, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் இல்லை!

சித்திரை 29, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

சுற்றுலா விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்!

ஆடி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

குடும்பத் தகராறு: கணவர் தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube