பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் “தெவிந்த” என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், 16 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ, குரூஸ சந்திப் பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 77 கிராம் 240 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 52 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயின், 430 போதை மாத்திரைகள், 02 வாள்கள், 01 மன்னா கத்தி, ஒரு மின்சார தராசு மற்றும் 02 கைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இந்த சந்தேக நபர் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான “தெவிந்த” என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
