கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கிளிநொச்சி – முட்கொம்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சட்டவிரோதமான முறையில் அழித்துத் துப்புரவு செய்வதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
