Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

 பஸ் கட்டண திருத்தம் குறித்து தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை!

ஆனி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வருடாந்த பஸ் கட்டண திருத்தக் கொள்கைக்கு அமைவாக, திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டணங்கள் நாளை புதன்கிழமை (01) முதல் அமலுக்கு வர வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதாக சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வருடாந்த கட்டண திருத்தக் கொள்கையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய கட்டண மாற்றங்கள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த வருடாந்த கட்டண திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதுவரை தமக்கும் அல்லது பிற தனியார் பேருந்து சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து எந்தவித கலந்துரையாடலும் நடத்தவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திட்டமிட்டபடி பஸ் கட்டண திருத்தம் நாளை முதல் அமலுக்கு வராத பட்சத்தில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஊடகப் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் புதிய திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயாளர்களை அனுமதிக்க ஐ.டி.எச் மருத்துவமனை தயார்நிலையில்!

ஆடி 11, 2026
இலங்கை

கல்வி மறுசீரமைப்பு கொள்கை ஒரு மாதத்தில் இறுதி செய்ய ஜனாதிபதி உத்தரவு!

ஆனி 12, 2026
இலங்கை

இலங்கையின் கடல் வள மேம்பாட்டிற்கு புதிய சர்வதேச ஒத்துழைப்பு!

ஆனி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் மோசடி- பெண் கைது!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube