Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்–

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு பன்சேனை கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று சனிக்கிழமை (25) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஞா. நவீகரன்  PMJF. PMAF தலைமையில் பன்சேனை ஆரம்ப மருத்துவ  சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது

இதில் அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின்  மாவட்ட ஆளுநர் லயன் யி.ஷாஹிர் அஹமது PMJF. PMAF. முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன் ரி. ஆதித்தன் PMJF. PMAF, மாவட்ட ஆளுநர் சபை அதிகாரிகள், பல லயன்ஸ் கழகங்களின் தலைவர்கள், கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி சம்பிராய பூர்வமாக மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் நடமாடும் பல் சிகிச்சை கூடம், மருத்துவ ஆலோசனைகள்,  ஆய்வக பரிசோதனைகள் இடம்பெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவையை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு  அத்தியாவசிய மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இந்த இலவச  மருத்துவ முகாமிற்கு மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன், வவுணதீவு பிரதேச செயலாளர், வைத்தியர்கள், கிராம அலுவலர், பொது சுகாதார பரிசோதகர் நடமாடும் பல் மருத்துவ சேவைப் பிரிவு, சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பல சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு  வழங்கினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாவின் பெறுமதி உயர்வு!

வைகாசி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் தீவிரம்; வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரிப்பு!

ஆடி 16, 2026
இலங்கைவிளையாட்டு

ஐபிஎல் மற்றும் ஏனைய சர்வதேச லீக் தொடர்களில் பங்கேற்க, தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றார் நுவான் துஷார

சித்திரை 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச அலுவலகங்களில் டிஜிட்டல் பயன்பாடு – வழிகாட்டல் வௌியீடு

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube