Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொக்லெட் வடிவில் ‘குஷ்’ ரக போதைப்பொருளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.48 கோடி ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளைச் சொக்லெட் வடிவில் விசித்திரமாக மறைத்துக் கொண்டு வர முயன்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இன்று (27) காலை 9:25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபரின் பயணப் பையை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனையிட்டபோது, 1.480 கிலோகிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப்பொருளைச் சொக்லெட் வடிவில் உருட்டி, அதன் மீது சொக்லேட் பூச்சு பூசி, பிரபல சொக்லெட் பிராண்டின் பெயர் அச்சிடப்பட்ட பொதிகளுக்குள் அடைத்து மிகவும் நுட்பமாகக் கடத்தி வர முயன்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைப்பு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும்!

வைகாசி 3, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

நமக்கு பிடித்த பதிவுகளை, பயனாளர்களை நேரடியா தெரிவு செய்யும் புதிய சட்டவரைவு

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் ‘WEAIR’ புதிய சரக்கு விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube