“எங்களுக்கு அரசியல் செய்தும் அனுபவமுண்டு, அரசியலில் வீழ்ந்து அனுபவமுண்டு” என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த அரசுடன் யாரும் ஆதரவாக இல்லை, இராணுவத்தினர், அரச ஊழியர்கள் , விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருமே இந்த அரசுக்கு எதிராகவே இருக்கிறார்கள். பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வீதிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படித்தான் எங்களுக்கும் ஆரம்பத்தில் இறங்கினார்கள். பின்னர் ஒருபோராட்டமே வெடித்தது. அதே போலத்தான் இந்த அரசுக்கும் நடக்கும்.
எனது தலைவர் மஹிந்த ராஜபக்ஷதான். அவர் ஒரு சிறந்த தலைவர் அவருக்கே எப்போதும் எனது ஆதரவு. 2029 தேர்தலில் யாரை போட்டியிட அனுப்பப்போகிறோம் என்பதை இப்போது சொல்ல முடியாது. என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, அரசாங்கத்தை ஒரு மலைக்கும் எதிர்க்கட்சியை ஒரு பள்ளத்தாக்குக்கும் ஒப்பிட்டு, இறுதியில் மலை பள்ளத்தாக்கில் சரிந்து, எதிர்க்கட்சி புதிய மலையாக மாறும் எனவும் குறிப்பிட்டார்.
விடியோவை பார்வையிட கீழுள்ள link ஐ click செய்யுங்கள்….
https://www.facebook.com/reel/1648955560286242
