முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடெல்லவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (28) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
