கொழும்பு செட்டியார் தெரு மற்றும் பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 152ஆவது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடி வேல் வெள்ளி ரத பவனி நேற்று (28) நடைபெற்றது.
ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரத பவனி காலி வீதி வழியாக ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்ததையடுத்து, ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
