2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கை வீரர் பாலித்த பண்டார ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
போட்டியில் இரண்டாவது சுற்றில் பாலித்த பண்டார சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த பதக்கத்துடன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது.
இதேவேளை கடந்த 2022ம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் பாலித்த பண்டார தட்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
