ஹப்புத்தளை – பங்கெட்டிய முதல் விகாரகலை வரையிலான பகுதியில் கடுமையான பனிமூட்டத்துடன் மழையும் பெய்து வருவதால், அந்த வழித்தடத்தில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறு ஹப்புத்தளை போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறைந்த காட்சித்திறன் நிலவுவதால், வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிப்பதுடன், வாகனங்களின் முன்விளக்குகளை பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
