Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்!

ஆவணி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் காணிகள்,அரச காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நேற்று (31) கலந்துரையாடல் நடைபெற்றது.

இராணுவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி அருண ஐயசேகர அவர்களும், கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், முப்படை இராணுவ தளபதிகள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ தளபதிகள், பிரதேச செயலாளர்கள், கரைதுறைபற்று தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கிடையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ முகாம் உள்ள காணிகள், கேப்பாப்புலவு இராணுவ முகாம் உள்ள காணிகள், கிளிநொச்சியில் இராணுவ முகாம் உள்ள காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இதற்கு விசேட குழு அமைத்து காணி விடுவிப்பு தொடர்பாக பரிசீலிக்கப்படவுள்ளது தொடர்பாக பிரதி அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு : இருவர் கைது!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிரஞ்சியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு!

ஆடி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஏ.ஐ. வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும்

புரட்டாதி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube