இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 04ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
முதலில் 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியொன்று திட்டமிடப்பட்ட போதிலும், தற்போது அது 3 நாட்கள் கொண்ட போட்டியாக அது மாற்றப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சிப் போட்டி ஆகஸ்ட் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
