குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ் 31ம் திகதி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 26,023 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் மொத்தம் 480 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேரடியாகக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டதுடன், சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 257 பேரும், திறந்த பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்ட 129 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக மதுபோதையில் வாகனம் செலுத்திய 50 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கவனயீனமாக வாகனம் செலுத்திய 110 பேருக்கும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,186 பேருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
