யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்கூடல் பகுதியில் சட்டவிரோதமாக கடலாமைகளை வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து ஆறு கடலாமைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
