Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

வைகாசி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நிந்தவூரில் இன்று வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்ற நிகழ்வில் தனியார் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு, சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்வுகளுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அரச மற்றும் தனியார் ஊடகங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக, நிகழ்வுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நடும் நிகழ்வில் பங்கேற்றார். அத்துடன் அவர் நிந்தவூர் கலாசார மையத்துக்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்விலேயே தனியார் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் திணைக்களத்தின் ஊடாக இந்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டபோதும் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் செய்தி சேகரிக்க முற்றாக தடுக்கப்பட்டனர்.

தனியார் ஊடகங்களுக்கு, சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்வுகளுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

பல மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

ஆடி 2, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

116 வயதில் திருப்பதி தரிசனம்

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான மருந்துகள் மற்றும் உரிம மீறல்களுக்காக மருந்தகங்களுக்கு அபராதம் விதிப்பு!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘GovPay’ டிஜிட்டல் தளம் ஊடாக 3.86 பில்லியன் பரிவர்த்தனைகள்!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube