Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்தத இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

அனர்த்தத்திற்குள்ளான மற்றைய மீனவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்ததையடுத்து மீட்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (01) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற டிங்கி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளமை முதன்முதலில் வேறொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தெரியவந்தது.

எவ்வாறாயினும், இச்சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல்போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், விபத்துக்குள்ளான மீனவர்களையும் காணாமல்போன படகுகளையும் மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு விசேட நடவடிக்கையொன்றையும் ஆரம்பித்திருந்தன.

குறித்த தேடுதல் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 412’ ரக ஹெலிகொப்டர் ஒன்றும், கடற்படைக்குச் சொந்தமான ‘டோரா’ படகொன்றும் விசேட மூழ்கிப்படை வீரர்களின் குழுவொன்றும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றத்துக்குள் மோதிக்கொண்ட ‘படோவிட்ட அஸங்க’ மற்றும் ‘கொஸ் மல்லி’ ஆகியோரின் சகாக்கள்

புரட்டாதி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபா தொடர்பில் நாமல் கடும் விமர்சனம்!

சித்திரை 28, 2026
இலங்கை

அரிசியை அடிப்படை உணவாக மட்டுமல்லாது பல்துறை பயன்பாட்டுக்கு விரிவுபடுத்த அரசு திட்டம் – அமைச்சர் லால் காந்த

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube