Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் காணப்படும் தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலய கட்டிடம்

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாவட்ட திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில், இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே குடைசாய்ந்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே அருகாமையில் உள்ள மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.

எனவே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடசாலை மாணவர்களின் நலனை கொண்டு குறித்த கட்டிடத்தை திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு பெற்றார்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறை உடனடியாக ரத்து!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பலசரக்கு கடைக்கு அபராதம்

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் தொடர் குடியிருப்பின் மீது லொரி ஒன்று மோதி விபத்து!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகள் வயது திருத்தம்: அரசிடம் திருச்சபை கோரிக்கை!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube