Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பலசரக்கு கடைக்கு அபராதம்

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன் மற்றும் மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினரால் செவ்வாய்க்கிழமை (18) பலசரக்குக் கடைகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்கள் என்பன திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது, களுவாஞ்சிகுடியில் பல சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த பலசரக்குக் கடை ஒன்று இனம் காணப்பட்டு அக்கடை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சுகாதாரப் பரிசோதகர்களால் முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது.

குறித்த பலசரக்குக் கடை மிகமோசமான நிலையில் சுகாதார சீர்கேடுகள் நிலவியிருந்த நிலையிலேயே சுகாதாரப் பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையின்போது இது கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த பலசரக்குக் கடையின் உரிமையாளருக்கு எதிராக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கு மூன்று இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன், குறித்த பலசரக்குக் கடையில் காணப்படும் அனைத்துவித சுகாதார குறைபாடுகளையும் பூர்த்தி செய்யப்படும்வரையில் கடையை மூடுமாறும் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி நகரில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தை, பலசரக்குக் கடைகள் போன்றன சுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்பட்டுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மரண தண்டனை, ஆயுள் தண்டனை குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது – நீதியமைச்சர்

ஆவணி 24, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்- மூவர் உயிரிழப்பு!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் குழந்தைகள், சிறுவர்களின் என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜயை சந்திக்க நேரம் கேட்ட காங்கிரஸ்

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube